Thursday, September 17, 2009

Trying Out Posterous!

Hope this gets me active on blogosphere, apparently blogger did not.

Posted via web from spartaa's posterous

Friday, September 11, 2009

ப்ராஜெக்ட் நா என்ன? - ஒரே காமெடி


"
ம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டுபந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களேஅப்படிஎன்னதான் வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பாநானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"
இந்த மாதிரி அமெரிக்கால்-இங்கிலாந்து- இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்கஇவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"
சரி"
"
இந்த மாதிரி Client- மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம்.இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்ககாசுகொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான்உங்களால இத பண்ண முடியுமாஅத பண்ண முடியுமான்னுஅவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
"
இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MS
னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
"
முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"
சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"
அது எப்படிஇந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சுதரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்கஇதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட்கிடைக்கும்"
"500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"
"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்ஆனா அந்த 50நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாதுஎன்ன செய்யனும்னு நமக்கும் தெரியாதுஇருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகுப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்லஎங்களுக்கு இது வேணும்அதுவேணும்னுபுலம்ப ஆரம்பிப்பான்.
"
அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
"
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
"CR-
னா?"
"Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம்இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம்கொடுக்கணும்"னு சொல்லுவோம்இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
அப்பாவின்
முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"
இதுக்கு அவன் ஒத்துபானா?"
"
ஒத்துகிட்டு தான் ஆகணும்முடி வெட்ட போய்ட்டுபாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"
சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"
முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாருஇவரது தான் பெரிய தலைப்ராஜெக்ட் சக்சஸ்ஆனாலும்ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
"
அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."
"
அதான் கிடையாதுஇவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"
அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.
"
நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம்எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்ஆகுறது தான் இவரு வேலை."
"
பாவம்பா"
"
ஆனா இவரு ரொம்ப நல்லவருஎங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"
எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாருநாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றதுமட்டும் தான் இவரோட வேலை."
"
நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"
"
இவருக்கு கீழ டெக் லீட்மோடுல் லீட்டெவலப்பர்டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"
இத்தனை பேரு இருந்துஎல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"
வேலை செஞ்சா தானேநான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர்டெஸ்டர்னுஅவங்க மட்டும் தான் எல்லா வேலையும்செய்வாங்கஅதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம்மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"சொல்லிநெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"
அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியேஅவங்களுக்கு என்னப்பா வேலை?"
"
இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலைபுடிக்காத மருமக கை பட்டா குத்தம்கால் பட்டா குத்தம்இங்குறது மாதிரி."
"
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமாபுதுசா தான் இருக்குசரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"
அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தாஅந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டுஇருக்கும்நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"
கிளையன்ட் சும்மாவா விடுவான்ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"
கேக்கத்தான் செய்வான்இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலைவார ஆரம்பிப்போம்."
"
எப்படி?"
"
நீ கொடுத்த கம்ப்யூட்டர்- ஒரே தூசியா இருந்துச்சுஅன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமினஉன்னோட ஹேர் ஸ்டைல் எனக்குபுடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சுஇன்னும் கொஞ்ச நாள்தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"
சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"
அப்படி பண்ணினாநம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
"
அப்புறம்?"
"
ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும்அவனால அத புரிஞ்சிக்க கூடமுடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
"
அப்புறம்?"
"
அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்கஉங்க டீம்- ஒரு ஒன்னுரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்கசொல்லுங்கன்னுபுது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintanence and Support". இந்த வேலை வருஷகணக்கா போகும்.
"
ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரிதாலி கட்டினா மட்டும் போதுவருஷகணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னுஇப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
"
எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."