Sunday, December 6, 2009

கனவா நினைவா

(மணம்)
கனவா நினைவா என் கண்கள் தேடும் தீவா
உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா
உனை வேராக உறிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
மழையாய் மனதில் விழுந்தவள் நீயே தானா...

(மலர்)
எனை தாங்கும் புவி தாயே
உயிரான மெய் நீயே
இதயத்தில் இன்று கேட்கும் இசை நீயடா
கடலோர அலை நீயே
எனை தீண்ட வருவாயே
நிழலாக நானும் அன்பே நிஜம் நீயடா
மலரில் மனமாய் ஒன்று சேர்ந்தவன் நீயடா

(நிழல்)
கனவாய் நினைவாய் என் கண்கள் தேடும் தீவா
உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா
(நிஜம்)
உனை வேராக உறிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
(நிழல்)
மழையாய் மனதில் விழுந்தவன் நீயே தானா...

(உயிர் - நிழல் + நிஜம்)
கனவா நினைவா என் கண்கள் தேடும் தீவா
உறவா உயிரா என் மனதில் பூத்த பூவா..

Posted via email from spartan's posterous

2 comments:

Unknown said...

Prathap eluthunatha illa sutatha

prathap said...

its from the Asal promo song - http://www.youtube.com/watch?v=Cxqy6Y81w00